உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அறுவை சிகிச்சை எதிரொலி - இரண்டு படங்களை தள்ளிவைத்த சிரஞ்சீவி!

அறுவை சிகிச்சை எதிரொலி - இரண்டு படங்களை தள்ளிவைத்த சிரஞ்சீவி!

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தற்போது மோகன்ராஜா இயக்கி வரும் காட்பாதர் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கையில் சிறிய அளவிலான ஆபரேஷன் செய்து கொண்டார். அவரை 15 நாட்கள் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதனால் நவம்பர் முதல் வாரத்தில் இருந்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் சிரஞ்சீவி. மேலும் காட்பாதர் படத்தில் நடித்து வரும்போது போலா சங்கர், வால்டர் வீரய்யா ஆகிய படங்களிலும் நவம்பர் மாதத்தில் இருந்து நடிக்க திட்டமிட்டிருந்தார் சிரஞ்சீவி. ஆனால் இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்த முடிவை மாற்றி விட்டார். அதாவது இந்த ஆண்டில் காட்பாதர் படத்தை முடித்து விட்டு 2022ல் இருந்து போலா சங்கர், வால்டர் வீரய்யா ஆகிய படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !