உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துணிச்சலான காவல்துறை அதிகாரி வேடத்தில் சம்யுக்தா!

துணிச்சலான காவல்துறை அதிகாரி வேடத்தில் சம்யுக்தா!


தனுசுடன் 'வாத்தி' படத்தில் நடித்த பிறகு தற்போது ராகவா லாரன்ஸ் உடன் 'பென்ஸ்', விஜய் சேதுபதி நடித்துள்ள 'ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு' போன்ற படங்களில் நடித்துள்ளார் சம்யுக்தா. அதைத்தொடர்ந்து 'பிளாக் கோல்ட்' என்ற படத்தில் முதல் முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார்.

இந்தப் படம் குறித்து சம்யுக்தா வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், பிளாக் கோல்ட் படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறேன். அதோடு முதல் முறையாக ஒரு துணிச்சலான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். இந்த படத்தின் சண்டைக் காட்சிகளில் நடிக்கும் போது பலமுறை உடம்பில் காயப்பட்டபோதும் அதை எல்லாம் பொறுப்படுத்தாமல் நடித்து வருகிறேன் என்று கூறும் சம்யுக்தா, இந்த படம் வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் திரைக்கு வருகிறது. அதோடு தற்போது ஸ்வயம்பு என்ற ஒரு தெலுங்கு படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடித்துள்ளேன். இந்த படமும் என்னை புதிய பரிமாணத்தில் வெளிப்படுத்தப் போகிறது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற சவாலான கதாபாத்திரங்களில் கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறுகிறார் சம்யுக்தா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !