நாகார்ஜூனாவின் 'கிங்-100' படத்தில் வில்லனாக நடிக்கும் அசோக் செல்வன்!
ரா.கார்த்திக் இயக்கத்தில் நாகார்ஜூனா நடித்து வரும் படம் 'கிங்-100'. நாகார்ஜூனாவின் 100வது மைல்கல் படமான இப்படம் குடும்ப கதையில் உருவாகி வருகிறது. ஹிந்தி நடிகை தபு மற்றும் சுஷ்மிதா பேட், ஐஸ்வர்யா ராஜேஷ்,விஜயேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்நிலையில் தமிழ் நடிகர் அசோக் செல்வன் இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிப்பதாக தற்போது படக்குழு அறிவித்துள்ளது.
முன்னதாக, 2022ல் ரா. கார்த்திக் இயக்கிய 'நித்தம் ஒரு வானம்' என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார் அசோக் செல்வன். இந்நிலையில் தற்போது ரா.கார்த்திக் இயக்கத்தில் நாகார்ஜூனா நடிக்கும் கிங்-100 படத்தில் அவர் வில்லனாக நடிப்பது எதிர்ப்பார்ப்புகளை அதிகப்படுத்தியுளளது. அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் கிங்-100 படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் வருகிற டிசம்பர் 24ம் தேதி வெளியாகிறது.