முதல்வர் விஜய் ‛சிக்மா' படம் பார்ப்பாரா
முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி உள்ள முதல் படம் ‛சிக்மா'. சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம், சம்பத் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். நாளை மறுநாள் அக்., 2ல் ரிலீஸ் ஆகிறது. படம் குறித்து சென்னையில் சந்தீப் கிஷன் அளித்த பேட்டி...
‛‛இது கமர்ஷியல் கதை. கவ் பாய் கதை அல்ல, அந்த மாதிரி ஒரு காட்சியும் இருக்கிறது. காதல் ஆக் ஷன் இருக்கிறது. ஒரு குத்து பாடலும் உள்ளது. இயக்குனராக ஜேசன் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். எந்த இடத்திலும் டென்சன் ஆகவில்லை. 24 வயதில் படப்பிடிப்பு தொடங்கினார். அந்த வயதிலும் அவரிடம் பக்குவம் இருந்தது. அவர் அடுத்து நடிக்கலாம். அந்த படத்தில் கூட நான் அவருடன் இணைந்து நடிக்க ரெடி.
கடந்த சில நாட்களாக புரமோஷனுக்காக ஊர் ஊராக சுற்றி வருகிறோம். ஹீரோயின் உட்பட எல்லாருக்கும் காய்ச்சல். அவருக்கும் வைரல் பீவர். அதனால் இன்றைய நிகழ்ச்சிக்கு வரவில்லை. படத்தை முதல்வர் பார்ப்பாரா என கேட்கிறார்கள். அவர் படம் பார்க்க வேண்டாம் என யாராவது நினைப்பார்களா. அவர் பார்த்து ரசிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
படம் பார்க்க வருபவர்கள் எதிர்பார்ப்ப்புடன் வர வேண்டாம். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் விதமாக இருக்கும். சினிமாவை அறிந்த, படித்த இயக்குனர் ஜேசன். அவருடன் பணியாற்றுவது மகிழ்ச்சி. லோகேஷ் கனகராஜின் முதல் படமான மாநகரம் படத்தில் நடித்தது மகிழ்ச்சி. அந்த கூட்டணி அமைந்தால் நடிப்பேன். ஜேசன் நடிக்கணும் என்பது என் ஆசை. ஆனால் அவருக்கு இயக்கத்தில் தான் ஆர்வம் இருக்கிறது'' என்றார்.