மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
1412 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
1412 days ago
சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம்
1412 days ago
ராம்குமார் இயக்கத்தில் சி.வி குமார் தயாரித்த முண்டாசுப்பட்டி 2014ஆம் ஆண்டு வெளியானது. 1980களின் பின்னணியில் உருவான முண்டாசுப்பட்டி மூடநம்பிக்கைகள் நிறைந்த ஒரு கிராமத்தில் நடக்கும் காமெடி கதை. போட்டோ எடுத்தாலே ஆயுள் குறைந்து விடும் என்று கருதுகிற கிராமத்தில் ஒரு விண்கல் விழுந்தால் என்ன ஆகும் என்பதை சொன்ன படம்.
விஷ்ணு விஷால், நந்திதா ஸ்வேதா, காளி வெங்கட், முனிஸ்காந்த் மற்றும் ஆனந்தராஜ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். இதன் இரண்டாம் பாகம் வெளிவரும் என்று தயாரிப்பாளர் சி.வி.குமார் முன்பே அறிவித்திருந்தார். தற்போது அதற்கான பணிகள் தொடங்கி உள்ளது.
இயக்குனர் ராம்குமாருடன் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ள சி.வி.குமார், எங்களிடம் இருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என்று டுவிட்டரில் கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள விஷால் எடுடா அந்த கேமராவை என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் முண்டாசுபட்டி 2வின் பணிகள் தொடங்கி இருப்பதை அறிய முடிகிறது. முந்தைய பாகத்தில் நடித்தவர்களே இதிலும் நடிப்பார்கள் என்று தெரிகிறது.
1412 days ago
1412 days ago
1412 days ago