உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் அண்ணன் பாலா உடன் பயணம் : சூர்யா அறிவிப்பு

மீண்டும் அண்ணன் பாலா உடன் பயணம் : சூர்யா அறிவிப்பு

‛நந்தா' படம் மூலம் நடிகர் சூர்யாவுக்கு திருப்புமுனை தந்தவர் இயக்குனர் பாலா. அதன்பின் இருவரும் பிதாமகன் படத்திலும் இணைந்தனர். தொடர்ந்து பாலாவின் அவன் இவன் படத்தில் சிறப்பு வேடத்திலும் தோன்றினார். இந்நிலையில் மீண்டும் இந்த கூட்டணி இணைகிறார்கள். இதுப்பற்றி செய்திகள் மட்டுமே வந்த நிலையில் இப்போது சூர்யா உறுதி செய்துள்ளார்.

இதுப்பற்றி டுவிட்டரில், ‛‛என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர். ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர். 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான், அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்...
அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்'' என பதிவிட்டுள்ளார் சூர்யா.

அதேசமயம் இந்த படத்தை சூர்யா தயாரிக்கிறாரா இல்லை நடிக்கவும் செய்கிறாரா என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !