உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன?

மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன?

ராஜூ முருகன் இடத்தில் சசிகுமார் சைத்ரா நடித்த மை லார்ட் படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய சசிகுமார், ‛‛இந்த படம் வெள்ளிக்கிழமை சுமாரான வசூலை பெற்றது. அடுத்து வந்த நாட்களில் வசூல் எகிறியது. இப்பொழுது 250க்கும் அதிகமான தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்த வாரமும் இது தொடரும். இது வெற்றிப் படம். மேலும் சாட்டிலைட் ரைட்ஸ் விஜய் டிவி வாங்கியுள்ளது, டிஜிட்டல் ரைட்ஸ் விற்று உள்ளது என தயாரிப்பாளர் கூறியுள்ளார். இது எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த மாதிரியான படங்கள் ஓட வேண்டும் என்று பேசினார்.

உண்மையில் மை லார்ட் வெற்றி படமா என்று விசாரித்தால் இந்த படத்தின் தியேட்டர் வசூல் இன்னும் மூன்று கோடியை கூட தாண்டவில்லை. ஆனால் டிஜிட்டல், சாட்டிலைட் விற்றுள்ளதால் சில கோடி வருமானம் வந்துள்ளது. படத்தின் பட்ஜெட்டும் குறைவுதான் என்பதால் படக்குழு வெற்றி படம் என்று சொல்கிறது.

டூரிஸ்ட் பேமிலி 90 கோடியை எட்டிய நிலையில் மை லார்ட் மிக மிக குறைவான வசூலை பெற்றுள்ளது என்கிறார்கள் கோலிவுட்டில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !