உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து?

சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து?


'ஓ மை கடவுளே, டிராகன்' போன்ற படங்களை இயக்கியவர் அஸ்வத் மாரிமுத்து. அடுத்தபடியாக சிம்பு நடிப்பில் 'காட் ஆப் லவ்' என்றொரு படத்தை இயக்கப் போகிறார். இந்த நிலையில் டிராகன் படத்திற்கு பிறகு ரஜினியிடம் ஒரு கதை சொன்னார் அஸ்வத் மாரிமுத்து. ஆனால் அதில் ரஜினி நடிக்க விரும்பவில்லை. அதன் காரணமாகவே தற்போது அந்த கதையை சூர்யாவிடம் கூறியுள்ளாராம்.

மேலும் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' படம் சட்டசபை தேர்தலுக்கு பிறகு வெளியாகும் என்று கூறப்படும் நிலையில், அதையடுத்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46வது படத்தில் நடித்திருக்கும் சூர்யா, அடுத்து ஜீத்து மாதவன் இயக்கும் தனது 47வது படத்தின் நடிக்கிறார். அப்படம் போலீஸ் கதையில் உருவாகிறது. அந்த படத்துக்கு பிறகு அவர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !