உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம்

படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம்


தற்போது அட்லி இயக்கும் தனது 22வது படத்தில் பிசியாக நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 23வது படத்தில் நடிப்பதற்கும் ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த நிலையில் 'ஏஏ23' என்ற ஒரு தீம் பாடல் சோசியல் மீடியாவில் வைரலானது. இந்த பாடல் ரசிகர்களையும் திரைப்பட ஆர்வலர்களையும் ரசிக்க வைத்தது. பல ரீல்கள், குறும்படங்கள் மற்றும் ரிங் டோன்கள் அதை பயன்படுத்தி உருவாக்கப்பட்டன. தற்போது இது டிஜிட்டல் உலகில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 'ஏஏ23 தீம்' என்று பெயரிடப்பட்ட இந்த பாடல் ஒரு மில்லியன் இன்ஸ்டாகிராம் ரீல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. படம் திரைக்கு வருவதற்கு முன்பே இப்படி ஒரு சாதனை எட்டப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் லோகேஷ் கனகராஜூடன் அல்லு அர்ஜுன் சிரித்துக் கொண்டிருக்கும் ஒரு செல்பியை இந்த படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கவுள்ள நிலையில், படம் குறித்த மற்ற தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !