உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஷாப்பிங் மாலில் கவர்ச்சியாக ஆட்டம் போட்ட சீரியல் நடிகை! வைரலாகும் வீடியோ

ஷாப்பிங் மாலில் கவர்ச்சியாக ஆட்டம் போட்ட சீரியல் நடிகை! வைரலாகும் வீடியோ

ரோஜா சீரியலின் கதாநாயகியான ப்ரியங்கா நல்காரியின் கவர்ச்சியான டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ப்ரியங்கா நல்காரி. பல படங்களில் சிறு வேடங்களில் ஹீரோயின் தோழியாகவும் தோன்றியுள்ள ப்ரியங்காவுக்கு ரோஜா தொடர் நல்ல அந்தஸ்தை பெற்று தந்துள்ளது. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ப்ரியங்காவுக்கு தற்போது தமிழகத்தில் எக்கசக்க ரசிகர்கள் உள்ளனர்.

இன்ஸ்டா ரீல்ஸில் அடிக்கடி ஆட்டம் போட்டு ரசிகர்களை மகிழ்வித்து வரும் ப்ரியங்கா தற்போது பொது இடத்தில் கவர்ச்சியான ஆட்டத்தை போட்டு அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சென்னையில் பிரபலமான ஷாப்பிங் மால் ஒன்றில் நிற்கும் ப்ரியங்கா குட்டையான உடை அணிந்து பார்ப்பதற்கே கவர்ச்சியாக உள்ளார். மாலில் ஆட்கள் இல்லாத நேரத்தில் நடு ஹாலில் நின்று அவர் டான்ஸூம் ஆடியுள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்களை ப்ரியங்கா நல்காரி ஆடும் அழகை கண்டு இன்ஸ்டாவில் அவரை ஈ போல் மொய்த்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !