மேலும் செய்திகள்
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
1423 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
1423 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
1423 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
1423 days ago
ஆஸ்கர் விருது வென்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான், பரிஸ்டான் என்ற அனிமேஷன் இசை ஆல்பத்திற்கு இசை அமைத்து இயக்கி இருந்தார். அமல் என்ற ஒரு முஸ்லிம் சிறுமியின் சிறு பயணத்தை அடிப்படையாக கொண்டது இந்த இசை ஆல்பம். இந்த ஆல்பத்துக்கு சர்வதேச சவுண்ட் பியூச்சர் என்ற விருது கிடைத்துள்ளது. இது சிறந்த அனிமேஷன் மியூசிக் ஆல்பத்திற்கான விருதாகும். இதனை ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டரில் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். இந்த ஆல்பம் ஏற்கெனவே குளோபல் ஷார்ட்ஸ் மியூசிக் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கதீஜா ரகுமான் கூறியிருப்பதாவது: நான் சென்னையில் பல்வேறு வகையான இசை மற்றும் பலதரப்பட்ட நண்பர்களுடன் பன்முக கலாச்சார குடும்பத்தில் வளர்ந்தேன். வாழ்க்கையின் அதிசயங்களில் நான் எப்போதும் ஈர்க்கப்பட்டேன். மவ்லானா ரூமி சொல்வது போல். மண்டியிட்டு மண்ணை முத்தமிட ஆயிரம் வழிகள் உண்டு; மீண்டும் வீட்டிற்குச் செல்ல ஆயிரம் வழிகள் வீடியோவின் முக்கிய கதாபாத்திரமான அமல் என்னுடைய இத்தகைய அனுபவங்களையும் அறியாததை ஆராயும் ஏக்கத்தையும் கொண்டு உருவாக்கப்பட்டது. என்று கூறியிருக்கிறார்.
1423 days ago
1423 days ago
1423 days ago
1423 days ago