உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என்றென்றும் புன்னகை தொடர் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கும் எக்ஸ் வில்லி!

என்றென்றும் புன்னகை தொடர் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கும் எக்ஸ் வில்லி!

ஜீ தமிழின் என்றென்றும் புன்னகை தொடரில் புதிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் சுஷ்மா நாயர். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் என்றென்றும் புன்னகை தொடர் 400 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சீரியல் நடிகை நீலிமா ராணி இந்த தொடரை தயாரித்து வருகிறார். நக்ஷத்திரா ஸ்ரீனிவாஸ், தீபக் குமார், நிதின் ஐயர், கவிதா உள்ளிட்டோர் முன்னணி வேடங்களில் நடித்து வரும் இந்த தொடரில் புதிய கதாபாத்திரத்தில் சுஷ்மா நாயர் அறிமுகமாகிறார்.

நாயகி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்த சுஷ்மா. சமீபத்தில் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து சுஷ்மா மீண்டும் சின்னத்திரையில் நடிப்பாரா என பலரும் எதிர்பார்த்திருத்த நிலையில் ஜி தமிழ் சேனலில் கம்பேக் கொடுத்துள்ளார். என்றென்றும் புன்னகை குழுவினருடன் சுஷ்மா நாயர் சூட்டிங் ஸ்பாட்டில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !