தேன்மொழி பி.ஏ சீரியலுக்கு என்ன தான் ஆச்சு?
ADDED : 1424 days ago
தேன்மொழி பி.ஏ. சீரியல் தொடரப்போவதாக அறிவிப்பு வெளிவந்த நிலையில் மீண்டும் சீரியல் முடியப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களின் மனதை கவர்ந்த தொடர்களில் ஒன்று தேன்மொழி பி.ஏ. விஜே ஜாக்குலின் கதாநாயகியாக நடிக்கும் இந்த தொடர் 300 எபிசோடுகளை கடந்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானபோது இந்த தொடர் முடியப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் அதை மறுத்த தொலைக்காட்சி நிறுவனம் தேன்மொழிக்கு எண்ட்கார்டா? என சீரியலை தொடரப் போவதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது தேன்மொழி பி.ஏ. சீரியல் மீண்டும் முடியப் போவதாக தகவல் வெளியாகியுள்ளதுடன் க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டுவிட்டதாக புகைப்படங்களும் பரவி வருகிறது. அதை பார்க்கும் ரசிகர்கள் மாற்றி மாற்றி சொல்கிறார்களே என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.