உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வைரலாகும் பக்ருவின் குடும்ப போட்டோ

வைரலாகும் பக்ருவின் குடும்ப போட்டோ

பிரபல மலையாள நடிகரான பக்ரு தமிழில் டிஷ்யூம், காவலன், ஏழாம் அறிவு என சில படங்களில் நடித்துள்ளார். கின்னஸ் சாதனை நடிகரான பக்ரு மலையாளத்தில் ஒரு படமும் இயக்கியுள்ளார். கடந்த 2006ஆம் ஆண்டு காயத்ரி மோகன் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் பக்ரு. இவர்களுக்கு தீப்தா கீர்த்தி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் பக்ரு தனது மனைவி மகளுடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். நீண்ட வருடங்களுக்கு பிறகு தனது மனைவி, மகளின் புகைப்படத்தை அவர் வெளியிட்டிருப்பதால் அந்த போட்டோ வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !