வேதாளம் தெலுங்கு ரீமேக்கான போலோ சங்கர் துவங்கியது
ADDED : 1425 days ago
தமிழில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான படம் வேதாளம். அண்ணன் தங்கை செண்டிமென்ட் கதையில் உருவான இந்த படத்தில் நாயகியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமிமேனனும் நடித்தனர்.
இந்த படம் தற்போது தெலுங்கில் ரீ-மேக் ஆகிறது. அஜித் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்க, மெஹர் ரமேஷ் இயக்குகிறார். படத்திற்கு போலோ சங்கர் என்று பெயர் வைத்துள்ளனர். நாயகியாக தமன்னாவும், தங்கையாக கீர்த்தி சுரேசும் நடிக்கும் இப்படத்தின் பூஜை நவம்பர்11ம் தேதியான இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. பிரபல இயக்குனர் ராகவேந்திர ராவ் கிளாப் அடிக்க, விவி நாயக் கேமராவை ஆன் செய்து துவக்கி வைத்தார்.