உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெள்ளம் வடிவதற்காக காத்திருக்கும் விஜய் படக்குழு

வெள்ளம் வடிவதற்காக காத்திருக்கும் விஜய் படக்குழு

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் இயக்குனரான நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் பீஸ்ட். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இயக்குனர் செல்வராகவன், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, யோகிபாபு, விடிவி கணேஷ், லிலிபுட் புரூக்கி, நடிகை அபர்ணா தாஸ், அங்கூர் அஜித் விகால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியது. அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. பின்னர் டில்லியிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டன.

இதையடுத்து நான்காம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னை பெருங்குடியில் உள்ள தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இங்கு பிரம்மாண்ட ஷாப்பிங் மால் செட் அமைக்கப்பட்டு, அதில் படப்பிடிப்பு நடைபெற்று வந்ததது. இந்நிலையில் இறுதிக்கட்டமாக நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பின் நடுவே மழை பெய்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்ததது. படப்பிடிப்பு பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளது. இன்று வெள்ளம் வடிந்தால் மட்டுமே படப்பிடிப்பு நடைபெறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !