உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிக்பாஸ் 5 : வைல்டு கார்டு என்ட்ரியாக சஞ்சீவ் என தகவல்

பிக்பாஸ் 5 : வைல்டு கார்டு என்ட்ரியாக சஞ்சீவ் என தகவல்

சின்னத்திரை நடிகரும், நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டில் நுழையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியின் பிக்பாஸ் ஷோவின் ஐந்தாவது சீசன் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் பெரும்பாலான போட்டியாளர்கள் புதுமுகங்கள் என்பதால் முந்தைய சீசன் அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லையாம். தினமும் சண்டையும் சச்சரவுமாக ஷோ நகர்ந்து வருகிறது.

இந்நிலையில் பிரபல நடிகர் சஞ்சீவ் வைல்டு கார்டு மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தால் பிக்பாஸ் டாஸ்க்குகளில் விஜய் பற்றி ஏதேனும் பேசுவார் என்பதால் பலரும் அவரது என்ட்ரியை ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !