மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
1391 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
1391 days ago
சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம்
1391 days ago
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ‛மாநாடு. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பங்கேற்று பேசிய நடிகர் சிம்பு ஆரம்பத்தில் கலகலப்பாகவும், முடிவில் கண்ணீர் மல்கவும் பேசினார்.
அவர் கூறுகையில், ‛‛வெங்கட்பிரபுவும், நானும் ஒவ்வொரு முறையும் படம் பண்ண வேண்டும் என்போம், ஆனால் வேறு ஒருவரை வைத்து படம் பண்ணிவிடுவார். இந்த படத்திற்கு ஒன்லைன் மட்டும் தான் சொன்னார். மிகவும் பிடித்திருந்தது. கண்டிப்பாக பண்றேன் என்றேன். படத்தை நீங்கள் பார்க்கும் போது உங்களுக்கு ஜாலியாக தெரியும். ஆனால் அதற்காக நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்பது எங்களுக்கு தான் தெரியும். அதை சொன்னால் புரியாது, படம் பார்க்கும்போது புரியும். இந்த படத்தில் பணியாற்றிய மொத்த கலைஞர்களும் கடுமையாக உழைத்துள்ளனர். அனைவருக்கும் நன்றி. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு பின் அவரை பிடிக்க முடியாது என்று நினைக்கிறேன்.
எனக்கு எல்லாமே யுவன் தான். எங்கள் இருவருக்கும் அப்படி என்ன மாதிரி புரிதல் உள்ளது என இதுவரை தெரியாது. நான் என்ன சொன்னாலும் அதை பொறுமையாக கேட்டுக் கொள்வார். அதனால் அவரிடம் உங்க ராசி, நட்சத்திரம் என்ன என்று சொல்லுங்க, அது மாதிரியே எனக்கு பெண் பார்ப்போம் என்பேன். ஏனென்றால் என்னை தாங்கிக் கொள்ளும் இதயமும், புரிந்து கொள்ளும் இதயமும் அவர் தான் என கலகலப்பாக பேசினார்.
கடைசியாக எனக்கு நிறைய பிரச்னை கொடுக்குறாங்க, பிரச்சனையை நான் பார்த்துக் கொள்கிறேன், என்னை மட்டும் நீங்கள்(ரசிகர்கள்) பார்த்துக் கொள்ளுங்கள் என மேடையிலேயே கண்கலங்கினார். அவரை மேடையில் இருந்த மாநாடு படக்குழுவினர் சமாதானம் செய்தனர்.
1391 days ago
1391 days ago
1391 days ago