அடுத்தடுத்து வெளியாகும் கல்யாணியின் 3 படங்கள்
இயக்குனர் பிரியதர்ஷன் - நடிகை லிசியின் மகளாக வாரிசு நடிகையாக களம் இறங்கியவர் கல்யாணி பிரியதர்ஷன். தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானாலும் தற்போது தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ஹீரோ படம் சரியாக போகவில்லை என்றாலும் தற்போது சிம்புவுடன் இணைந்து நடித்துள்ள மாநாடு படத்தை ரொம்பவே ஆர்வமாக எதிர்பார்க்கிறார் கல்யாணி.
மாநாடு படம் வரும் நவ-26ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் மலையாளத்தில் கல்யாணி நடித்துள்ள 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்' படம் வரும் டிச-2ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் அவரது ஜோடியாக மோகன்லாலின் மகன் பிரணவ் நடித்துள்ளார்.. அதுமட்டுமல்ல, இதே ஜோடி மலையாளத்தில் வினீத் சீனிவாசன் டைரக்சனில் நடித்துள்ள 'ஹிருதயம்' படமும் வரும் ஜனவரியில் வெளியாக இருக்கிறது. அடுத்தடுத்து வெளியாகும் இந்த படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றால் கல்யாணி பிசியான நடிகையாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.