உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெப் தொடரில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்

வெப் தொடரில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்

மேயாத மான் மூலம் அறிமுகமான பிரியா பவானி சங்கர் கைவசம் சுமார் 10-க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. இதில் குருதியாட்டம் படம் முடிந்து ரிலீஸிற்கு தயாராகிவிட்டது. இதுதவிர ஹாஸ்டல் ருத்ரன், இந்தியன் 2 , 10 தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் நாயகி பிரியா பவானி சங்கர் தான். இந்நிலையில் மாதவன் நடித்த யாவரும் நலம், சூர்யாவின் 24 படங்களை இயக்கிய விக்ரம் குமார் அடுத்து ஒரு வெப் தொடர் இயக்குகிறார். அதில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க உள்ளார். இதில் நாயகனாக நாகசைதன்யா நடிக்க உள்ளார். விக்ரம் குமார் தற்போது நாகசைதன்யா நடிப்பில் தேங்யூ என்ற படத்தை இயக்கி வருகிறார். அது முடிந்த பின்னர் இந்த வெப் தொடர் தொடங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !