அகல்யா வெங்கடேசனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! மாப்பிள்ளை யார் தெரியுமா?
ADDED : 1544 days ago
டிவி தொகுப்பாளினி அகல்யா வெங்கடேசனின் நிச்சயதார்த்தம் இரண்டு தினங்களுக்கு முன் நடந்து முடிந்துள்ள நிலையில் அவரது வருங்கால கணவரின் போட்டோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் அகல்யா வெங்கடேசன். காமெடியான பேச்சால் அதிகம் நபரை ஈர்த்த அகல்யா சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கமர்ஷியல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் முன்னணி தொகுப்பாளர்கள் போலவே, அகல்யாவுக்கும் ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் அகல்யா வெங்கடேசனுக்கு சமீபத்தில் அருண் என்பவருடம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
தனக்கு நிச்சயதார்த்தம் நடந்த மகிழ்ச்சியான செய்தியை அகல்யா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். வைரலாகும் இந்த ஜோடியின் புகைப்படங்களை பார்த்து பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.