வித்தியாசமாக மோதிக்கொள்ளும் தம்பதி
ரொம்ப சமர்த்தாக நடித்து வந்த நடிகை திருமணம் விவாகரத்தில் முடிந்த பிறகு சினிமாவில் தீவிரம் காட்டி வருகிறார். இதுவரை நடித்திராத அளவுக்கு கவர்ச்சியில் தாராளம், சர்ச்சை காட்சிகள் கொண்ட கதைகளுக்கு ஓகே சொல்லி வருகிறார். மேலும் முதன்முறையாக ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.
இந்த பாடலிலும் நடிகை கவர்ச்சி அவதாரம் எடுத்திருக்கிறாராம். இது ஒருபுறமிருக்க நடிகையை விவாகரத்து செய்த கணவர், நடிகை தெலுங்கில் கவனம் செலுத்துவதற்கு போட்டியாக தமிழில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம். சொந்த நிறுவனம் சார்பில் தமிழில் படம் தயாரித்து நடிக்க கதை கேட்டு வருபவர் தமிழ் நடிகைகளுடன் ஜோடி சேரவும் ஆர்வம் காட்டுகிறார். ஒரு வெப் சீரிஸில் தமிழ் நடிகையுடன் ஜோடி சேர்ந்துள்ளார். தெலுங்கு நடிகைகள் எத்தனையோ பேர் இருக்க இந்த நடிகைக்கு வாய்ப்பு கிடைத்தது இப்படித் தான்...