உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒல்லியான நடிகைகள் காணாமல் போய்விட்டார்கள் : உருவகேலியால் இனியா ஆவேசம்

ஒல்லியான நடிகைகள் காணாமல் போய்விட்டார்கள் : உருவகேலியால் இனியா ஆவேசம்

சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த இனியா 'வாகை சூடவா' படத்தின் மூலம் பேசப்பட்டவர். அதன்பிறகு பல படங்களில் ஹீரோயினாக நடித்தாலும், 'கவர்ச்சி நடிகை' என்ற பட்டத்தையே பெற்றார். சமீபத்தில் அவர் நடித்த அடெல்ட் கண்டன்ட் படமான 'ஸ்வீட்டி நாட்டி கிரேஸி' படம் வெளியானது. இந்த படத்தில் அவர் உடல் பருமனுடன் ஆன்டி கேரக்டரில் நடித்தார்.

படத்தின் வெளியீட்டுக்கு பிறகு படத்தில் அவர் நடித்த கேரக்டர், மற்றும் அவரது உருவ தோற்றம் குறித்து சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டது.

இதுகுறித்து இனியா கூறியிருப்பதாவது: நான் தொடர்ந்து ஹீரோயினாக நடித்துக் கொண்டு தான் இருக்கிறேன். எனக்கு சமீபத்தில் கால் மற்றும் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை நடந்தது. அதனால் சரியாக உடற்பயிற்சி செய்ய முடியாமல் போனது. இதனால் உடல் எடை அதிகரித்துவிட்டது.

ஒரு நடிகை எடை கூடிவிட்டார் என்பதற்காக அவர் ஆன்ட்டி, அக்கா ரோல்களில் தான் நடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. குண்டாக இருப்பது பெரிய தவறு இல்லை. ஒல்லியாக இருந்த பல நடிகைகள் இப்போது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்கள், ஆனால் நான் இப்போதும் படங்களில் நடித்துக் கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் என்னை பாடி ஷேமிங் செய்கிறார்கள். என்று கூறியுள்ளார் இனியா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !