கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டார் கமல்ஹாசன்
ADDED : 1450 days ago
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பியதில் இருந்து, லேசான இருமல் பிரச்னையை எதிர்கொண்டுள்ளார். இதனையடுத்து பரிசோதனை செய்ததில், கோவிட் தொற்று உறுதியானது. இதனால், சென்னை, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது கமல்ஹாசன் முழுமையாக குணமடைந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3ம் தேதி வரை அவர் தனிமைப்படுத்தி இருக்குமாறு மருத்துவமனை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.