விநோதய சித்தம் நாளை டிவியில் ஒளிபரப்பு
ADDED : 1448 days ago
சமுத்திரகனி இயக்கி நடித்த படம் விநோதய சித்தம். அவருடன் தம்பி ராமய்யா, முனீஷ்காந்த், ஷெரின், சஞ்சனா ஷெட்டி உள்பட பலர் நடித்திருந்தார்கள். அமிராமி ராமநாதன் தயாரித்திருந்தார். இந்த படம் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. குடும்பத்தை சரியாக கவனிக்காமல் வேலை வேலை என்று அலையும் ஒரு நடுத்தர குடும்பத்து தலைவனின் திடீர் மரணத்தை தள்ளிப்போட்டு காலம் என்கிற இறைவன் அவனுக்கு நடத்துகிற பாடம்தான் படம். இந்த படம் தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகிறது. ஜீ தமிழ் சேனலில் நாளை (டிச 5) இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.