15வது திருமணநாள் : மனைவிக்கு காஸ்ட்லி கார் பரிசளித்த அல்லு அர்ஜுன்
ADDED : 14 hours ago
புஷ்பா 2 படத்தை அடுத்து தற்போது அட்லி இயக்கும் தனது 22 வது படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இதில் அவருடன் தீபிகா படுகோனே, மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர் என பலர் நடிக்க சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் ஆறாம் தேதி தனது மனைவி சினேகா ரெட்டியுடன் தங்களது 15வது திருமணநாளை கொண்டாடி உள்ளார் அல்லு அர்ஜுன். அப்போது தனது மனைவி சினேகாவிற்கு 1.5 கோடி ரூபாய் மதிப்பில் மெர்சிடிஸ் ஏஎம்ஜி சிஎல்இ 53 என்ற காரை திருமண நாள் பரிசாக அளித்திருக்கிறார். அது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.