அதிகரிக்கும் கிண்டலால் இறங்கி வந்த நடிகர்
ADDED : 1400 days ago
டிவியில் பிரபலமான சமையல் நிகழ்ச்சி மூலம் சினிமாவுக்கு என்ட்ரி ஆகிறார் அந்த ஹீரோ. முதல் பட ஆடியோ விழாவிலேயே அவர் பேசியது கடும் சர்ச்சைக்குள்ளாகி சமூகவலைதளங்களில் பேசுபொருளாகி விட்டது. இந்த நிலை நீடித்தால் படம் வெளியாகும்போது கழுவி ஊற்றபடும் என்பதை உணர்ந்த தயாரிப்பாளர் ஹீரோவிடம் ஒரு மன்னிப்பு அறிக்கை வெளியிட கேட்டுள்ளார். ஹீரோவோ அதற்கு உடன்படவில்லையாம். நடிகரை வைத்து படம் எடுக்க திட்டமிட்டு இருந்த தயாரிப்பாளர்களும் இப்போது பின்வாங்க தொடங்கி உள்ளனர். இதனால் அச்சம் அடைந்த ஹீரோ வருத்தம் தெரிவித்து ஒரு பதிவை வெளியிட தயாராகி வருகிறாராம். இன்றோ நாளையோ அந்த பதிவு வெளியாகலாம்.