அறிவழகன் இயக்கத்தில் மாதவன்
ADDED : 1531 days ago
சைலன்ஸ், மாறா படங்களுக்கு பிறகு ராக்கெட்ரி என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார் மாதவன். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகி உள்ளது. அதன்பிறகு இரண்டு ஹிந்திப் படங்களில் நடித்து வரும் மாதவன் தமிழில் புதிய படங்களில் கமிட் ஆகாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்போது ஈரம் அறிவழகன் இயக்கும் அடுத்த படத்தில் அவர் நடிக்கபோவதாக செய்தி வெளியாகி உள்ளது. தற்போது அருண் விஜய் நடிப்பில் பார்டர் என்ற படத்தை இயக்கி உள்ளார் அறிவழகன். இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து மாதவன் நடிக்கும் படத்தை அவர் இயக்கப் போகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளது.