நயன்தாராவுடன் பிப்ரவரி 22ல் திருமணம்? சஸ்பென்ஸ் வைத்த விக்னேஷ் சிவன்
ADDED : 1621 days ago
விக்னேஷ் சிவன், நானும் ரவுடி தான் படத்தின் மூலம் நயன்தாராவுடன் இணைந்தார். அதிலிருந்து அவர்கள் காதலில் உள்ளனர். இவர்கள் எப்போது திருமணம் செய்துக் கொள்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக, டிவி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நயன்தாரா மவுனம் கலைத்தார்.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தன் சமூகவலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில் 'யாரெல்லாம் 2-22-22 தேதியில் திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள், நான் இந்த தேதியை மிஸ் செய்ய விரும்பவில்லை' என்று குறிப்பிடபட்டுள்ளது.
எனவே நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் பிப்ரவரி 22 அன்று நடைபெற உள்ளதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.