ஸ்டைபர் மேன் நோ வே ஹோம் - உலக அளவில் ரூ.10200 கோடி வசூல்
ADDED : 1418 days ago
டாம் ஹாலந்த், ஜெண்டயா நடிப்பில், இயக்கத்தில் வெளிவந்த 'ஸ்பைடர்மேன், நோ வே ஹோம்' படம் உலக அளவில் 10,200 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது. இந்தியாவில் மட்டும் இந்தப் படம் ரூ.260 கோடி வசூலைத் தொட்டுள்ளது.
இந்தியாவில் அதிக வசூலைக் குவித்த ஹாலிவுட் படங்களில் இந்தப் படம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வசூல் 18 நாட்களில் கிடைத்த ஒன்றாகும்.
உலக அளவில் 1.37 பில்லியன் யுஎஸ் டாலர், ரூபாய் மதிப்பில் 10,200 கோடி வசூலைப் பெற்றுள்ளது. இது மூன்று வாரங்களில் கிடைத்த தொகை ஆகும். இன்னும் இப்படம் சீனா மற்றும் ஜப்பானில் வெளியாகவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
2021ம் ஆண்டு உலக அளவில் மிகப் பெரும் வசூலைப் பெற்ற ஒரே படம் இது.