நயன்தாராவுடன் திருமணம் எப்போது? விக்னேஷ் சிவன் பதில்
ADDED : 1376 days ago
விக்னேஷ் சிவன், நானும் ரவுடி தான் படத்தின் மூலம் நயன்தாராவுடன் இணைந்தார். அதிலிருந்து அவர்கள் காதலில் இருப்பதாக பேசப்பட்டது. இவர்கள் எப்போது திருமணம் செய்துக் கொள்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக டிவி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நயன்தாரா மவுனம் கலைத்தார்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் அளித்துள்ள பேட்டியில் திருமணம் பற்றிய கேள்விக்கு கூறியிருப்பதாவது, எந்த விஷயத்தை எப்ப சொல்லணுமோ அப்பப்ப சொல்லுவோம். ஏதாவது நல்ல விஷயம் நடந்தால் அதைக் கண்டிப்பா சொல்றோம். அதான் எங்கே போனாலும் டுவிட்டரில் பகிந்து கொள்கிறோமே, நாங்க எப்பவும் ரகசியமா இல்லையே! கல்யாணம் செய்யத்தான் வேணும். நடக்கும்போது சொல்றோம் என்றார்.