மனைவிக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த பா.ரஞ்சித்
ADDED : 1376 days ago
அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை படங்களை இயக்கியவர் ரஞ்சித். தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இதையடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். மேலும் தனது நீலம் புரடொக்சன்ஸ் சார்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர் போன்ற படங்களில் தயாரித்துள்ள பா. ரஞ்சித் தனது மனைவி அனிதாவுக்கு நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
இதுகுறித்து, ‛‛நட்சத்திரம் நகர்கிறது படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்தப் படத்தில் நடிப்பதற்கு கிடைத்த முதல் வாய்ப்புக்கு மிக்க நன்றி அன்புள்ள ரஞ்சித். கல்லூரி காலத்திற்குப் பிறகு உங்களுடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார் ரஞ்சித்தின் மனைவி அனிதா.