உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது

அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு முதன்முதலாக நடிக்கும் படம் அரசன். வட சென்னை கேங்க்ஸ்டர் கதையில் உருவாகும் இதில் சிம்பு இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். முதல் கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது சென்னையில் அரசன் படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக வடசென்னை செட் உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் முதல் கட்ட படப்பிடிப்பில் சிம்பு கலந்துகொண்ட நிலையில், இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், இந்த படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியும் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் குமார் என முக்கிய வேடங்களில் நடிக்கும் அனைவருமே இந்த இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை தாணு தயாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !