அனில் ரவிபுடி இயக்கத்தில் கார்த்தி, பஹத் பாசில் நடிக்கிறார்களா?
கடந்த ஐனவரி மாதம் சிரஞ்சீவி நடிப்பில் திரைக்கு வந்த படம் மன சங்கர வர பிரசாத் காரு. அனில் ரவி புடி இயக்கிய இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது தனது அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டுள்ளார் அனில் ரவிபுடி. அவர் இயக்கபோகும் புதிய படத்தில் கார்த்தி, பஹத் பாசில் ஆகிய இருவரும் இணைந்து நடிப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவி வந்தது. ஆனால் தற்போது அந்த செய்தியை மறுத்திருக்கிறார் அனில் ரவி புடி.
அவர் கூறுகையில், எனது அடுத்த படத்தில் ஏற்கனவே நான் இயக்கிய சங்கராந்திகி வஸ்துனம் என்ற படத்தில் அடித்த வெங்கடேஷ் ஹீரோவாக நடிக்கிறார். அது குறித்த அறிவிப்பை கூட இன்னும் நான் வெளியிடவில்லை. ஆனால் அதற்குள் கார்த்தி, பஹத் பாசில் இருவரும் எனது அடுத்த படத்தில் நடிப்பதாக செய்தி பரப்பி வருகின்றனர். அந்த செய்தியில் உண்மை இல்லை. அது வெறும் வதந்தி என்கிறார்.