ஹாக்டெய்ல் 2வில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா
ADDED : 1 hours ago
பிப்ரவரி 26ம் தேதி உதய்பூரில் விஜய தேவர கொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் தற்போது ராஷ்மிகா ஹிந்தியில் நடித்துள்ள ஹாக் டெய்ல்-2 படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்து ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ஷாகித் கபூர், கிர்த்தி சனோன், ராஷ்மிகா மந்தனா ஆகிய மூன்று பேரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இப்படம் நவீன கால உறவுகள் பற்றிய கதையில் உருவாகி இருக்கிறது. ராஷ்மிகா ஒரு லெஸ்பியன் வேடத்தில் நடிப்பதாக பாலிவுட் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.