மணிரத்னம் படத்தில் ஹீரோவாகும் சித்ஸ்ரீராம்?
ADDED : 1615 days ago
மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் பாடகராக அறிமுகமானவர் சித் ஸ்ரீராம். அதன்பிறகு தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பாடகராகி விட்டார். இந்தநிலையில் தான் தயாரித்த வானம் கொட்டட்டும் என்ற படத்தில் அவரை இசையமைப்பாளராக்கினார் மணிரத்னம்.
இந்தநிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி முடித்துள்ள மணிரத்னம் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமடைந்துள்ளார். அதோடு பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு முன்பாக இன்னொரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ள மணிரத்னம் அந்த படத்தில் நாயகனாக நடிக்க சித்ஸ்ரீராமை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படத்திற்கான கதையை ஜெயமோகன் தற்போது எழுதி வருவதாகவும் கூறப்படுகிறது.