உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷின் வாத்தி துவங்கியது : வைரலான புகைப்படம்

தனுஷின் வாத்தி துவங்கியது : வைரலான புகைப்படம்

மாறன், திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்து முடித்துள்ள தனுஷ், தற்போது வெங்கி அட்லூரி இயக்கும் வாத்தி படத்தி நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தபடத்தில் தனுசுக்கு ஜோடியாக சம்யுக்தா நடிக்கிறார்.

இந்தபடத்தின் தொடக்க நாளன்று தனுஷ் - சம்யுக்தா இடம்பெற்ற புகைப்படம் வெளி யான நிலையில் தற்போது படப்பிடிப்பு தளத்தில் தனுஷ் நடித்து வரும் ஒரு புகைப்படத்தை வாத்தி படத்தை தயாரிக்கும் சித்தாரா எண்டர்டெய்ன் மென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் சட்டை கையை மடித்து விட்டபடி ஒரு வித்தியாசமான கெட்டப்பில் தோன்றுகிறார் தனுஷ். இப்படத்தில் லேசான தாடி உள்ளபடி நடிக்கும் தனுஷ் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நடிப்பதையும் இந்த புகைப்படம் வெளிப்படுத்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !