டிவி நடிகை ஜெனிப்ரியா திருமணம் : ஆடிட்டரை மணந்தார்
'வாணி ராணி', 'அழகு' உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தவர் ஜெனிப்ரியா என்கிற சாரா. சில படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2024ம் ஆண்டு சென்னையில் இவருக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த நேசன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. பின்பு இந்த நிச்சயதார்த்தம் கைவிடப்பட்டது. நேசன் தன்னை ஏமாற்றி தன் நகைகளையெல்லாம் பறித்துச் சென்று விட்டதாகக் சாரா, நேசன் மீது போலீஸில் புகாரும் கொடுத்தார்.
இந்த நிலையில் அவர் தற்போது மோகன் சுந்தர் என்ற ஆடிட்டரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதில் மிக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். கடந்த சில மாதங்களாக காதலித்து வந்த இவர்கள் இப்போது திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஜெனிப்பிரியா தற்போது நடிப்பதோடு மேக்அப் ஸ்டூடியோவும் நடத்தி வருகிறார். மோகன் சுந்தர் தனியாக கம்பெனி நடத்தி வருகிறார். முதல் திருமண ஏற்பாடு தவறாக போய்விட்டதால் இந்த திருமணத்தை எளிமையாக நடத்தி இருக்கிறார் ஜெனிப்பரியா. என்றாலும் நண்பர்களுக்காக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்.