சர்தார் மீண்டும் ஆரம்பம் - முதிர்ச்சியான கெட்டப்பில் அசத்தும் கார்த்தி
ADDED : 1416 days ago
பொன்னியின் செல்வன், விருமன் படங்களில் நடித்துள்ள கார்த்தி தற்போது சர்தார் படத்தில் நடித்து வருகிறார். பி.எஸ். மித்ரன் இயக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் அப்பா - மகன் என இரண்டு விதமான வேடங்களில் நடிக்கிறார் கார்த்தி. அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்க, சிம்ரனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் இளமையான வேடத்தில் நடிக்கும் கார்த்தி போலீசாக நடித்துள்ள நிலையில் அவர் முதிர்ச்சியான தாடி வைத்த கெட்டப்பில் நடித்துள்ள தோற்றம் தற்போது வெளியாகி வைர லாகி வருகிறது. ஒரு சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாகி உள்ளது.