உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா'

‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா'

பாரி இளவழகன் நடிப்பு, இயக்கத்தில் 2024ம் ஆண்டு வெளியாகி விமர்சகர்கள் மத்தியில் பாராட்டை பெற்ற படம் ஜமா. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை இயல்பாக சொன்னது. அடுத்து இவர் இயக்கி நடித்துள்ள படத்தை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

பாரி ஜோடியக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார். இவர் தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தவர். ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள கதாபாத்திரத்தில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவருடன் சேத்தன், வைரல் யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படத்திற்கு பெயர் வைக்காமலே படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு ‛அன்பே டயானா' என பெயரிட்டு முதல் பார்வை போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். போஸ்டரை பார்க்கையில் இது காதல், திருமணத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படமாக தெரிகிறது. கோடையில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !