உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் மோதும் 'சத்யவான் சாவித்ரி'

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் மோதும் 'சத்யவான் சாவித்ரி'

விக்னேஷ் சிவன் உதவியாளர் பிரவீன் எஸ்.விஜய் இயக்கி வரும் படம் 'சத்யவான் சாவித்ரி'. கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த வுமன் சென்ட்ரிக் படத்தில் மிஷ்கின், பால சரவணன், சாருகேஷ், ஷில்பா மஞ்சுநாத், மாலா பார்வதி, தீபா, ஆர்.சுந்தர்ராஜன், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வெடிக்காரன்பட்டி சக்திவேல், உமேஷ் குமார் பன்சால், வைஷ்ணவி விவேக் சந்தர் இணைந்து தயாரிக்கிறார்கள். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார், அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தின் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளது. படம் குறித்து இயக்குனர் பிரவீன் எஸ்.விஜய் கூறியிருப்பதாவது: இந்தப் படம் ஒரு கோர்ட் ரூம் டிராமா த்ரில்லர். கீர்த்தி அன்பான கணவனை கொண்ட குடும்ப பெண். ஆனாலும் சாதிக்கத் துடிக்கிற ஒரு வழக்கறிஞர். சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர் ஒரு முக்கிய வழக்கை நடத்த வேண்டிய சூழ்நிலை வருகிறது. அவர் வழக்கை நடத்த முடியாதபடிக்கு எமோஷனல் வலியும் இருக்கிறது. சீனியர் தவறான பக்கம் வாதாடும்போது, அதை சீனியருக்கு அவர் உணர்த்த முற்படும்போது, சீனியரின் அசல் முகம் வெளிப்படுகிறது. அந்த வழக்கு கீர்த்தியின் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் விதமாகவும் இருக்கிறது. அதிலிருந்து அவர் மீண்டாரா என்பதுதான் கதை.

கோர்ட்டில் கீர்த்தி சுரேஷும், சீனியர் லாயர் மிஷ்கினும் வாதங்களால் மோதிக் கொள்ளும் இடங்கள் உணர்ச்சியும், உண்மையும் கலந்திருக்கும், படத்தின் ஹைலைட்டாக அவர்களின் விவாதம் இருக்கும். என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !