ஜெயம் ரவியின் 28வது படத்தில் இணைந்த தன்யா ரவிச்சந்திரன்
ADDED : 1416 days ago
பலே வெள்ளையத்தேவா, பிருந்தவனம், கருப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தன்யா ரவிச்சந்திரன் தற்போது மாயோன், நெஞ்சுக்கு நீதி படங்களில் நடித்து வருகிறார். பூலோகம் படத்தை அடுத்து கல்யாண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 28வது படத்திலும் தற்போது இவர் இணைந்திருக்கிறார்.
இதே படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்து வந்தபோதும், அவருக்கு இணையான இன்னொரு நாயகியாக நடிக்க தன்யா ரவிச்சந்திரன் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வரும் நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பில் ஜெயம்ரவி யுடன் இணைந்து நடிக்கப்போகிறார் தன்யா ரவிச்சந்திரன்.