உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காலையில் தெலுங்கு முறைப்படி, மாலையில் கொடவா முறைப்படி…விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம்

காலையில் தெலுங்கு முறைப்படி, மாலையில் கொடவா முறைப்படி…விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம்


தெலுங்குத் திரையுலகத்தின் பரபரப்பான காதல் ஜோடிகளாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரது திருமணம் உதய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை நடைபெற்றது.

காலை 10.10 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க, தெலுங்கு முறைப்படி ராஷ்மிகாவின் கழுத்தில் மாங்கல்யம் கட்டியுள்ளார் விஜய் தேவரகொண்டா. கர்நாடக மாநிலம் கூர்க் நகரில் பிறந்து வளர்ந்த ராஷ்மிகா மந்தனா அவர்களது 'கொடவா' முறைப்படியும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டாராம். அதனால், அவரது விருப்பமாக இன்று மாலை 4 மணிக்கு மேல் அந்த முறைப்படியும் திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்குத் திரையுலகத்திலிருந்து மட்டும் சில பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். அவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !