மணிரத்னம், விஜய் சேதுபதி பட படப்பிடிப்பு தள்ளிப்போகிறது!
ADDED : 1 minutes ago
இயக்குனர் மணிரத்னம் மீண்டும் விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்து புதிய படம் இயக்குகிறார். சாய் பல்லவி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கின்றார். லைகா புரொடக்சன்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை மே மூன்றாம் வாரத்தில் தொடங்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், தற்போது ஒரு சில காரணங்களால் ஜூன், ஜூலை மாதத்திற்கு இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளனர் என புதிய தகவல் கிடைத்துள்ளது. இதற்கு காரணமாக மணிரத்னம் இன்னும் முழு திரைக்கதை பணிகளை நிறைவு செய்யவில்லை என ஒரு தரப்பும், மற்றொரு தரப்பில் லைகா நிறுவனத்திற்கு உள்ள பண நெருக்கடி இதற்கு ஒரு காரணம் என இரண்டு வித்தியாசமான காரணங்களைக் தெரிவிக்கின்றனர்.