உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'டிமான்டி காலனி 3' படத்தில் பல ஆச்சரியங்கள்: தயாரிப்பாளர் தகவல்

'டிமான்டி காலனி 3' படத்தில் பல ஆச்சரியங்கள்: தயாரிப்பாளர் தகவல்


தமிழில் ஒரு பேய் படம் வெற்றி பெற்றால் அதன் அடுத்தடுத்த பாகங்களும் வெற்றி பெற்று விடுகிறது. காஞ்சனா, அரண்மணை, டிமாண்டி காலனி போன்றவை அந்த வகை படங்கள். இதில் அஜய்ஞானமுத்து, அருள்நிதி இணைவில் வெளிவந்த டிமாண்டி காலனியின் முதன் இரண்டு பாகங்களும் வெற்றி பெற்றது. தற்போது இதன் 3வது பாகம் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் அருள் நிதியுடன் பிரியா பவானி சங்கர், ஆண்டி ஜாஸ்கெலைனன், குரு சோமசுந்தரம், ஜி.எம்.குமார், முத்துக்குமார், ஸ்ரீகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், கதிர், ஆஷிக் ஹூசைன், சர்ஜனோ காலித், அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ்.இசை அமைத்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பே வெளியீட்டுக்கு தயாராகி விட்ட இந்த படம் கிராபிக்ஸ் பணிகள் திருப்தியாக முடியாத காரணத்தால் தள்ளிப்போனது. தற்போது படம் வருகிற செப்டம்பர் மாதம் 11ம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறும்போது முதல் பாகத்தையும் இரண்டாம் பாகத்தையும் அஜய் ஞானமுத்து இணைத்த விதம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு திரைப்படத்தின் சீக்வலும் வெற்றி பெறுவது எளிதல்ல. ஆனால், 'டிமான்டி காலனி 2' மூலம் இயக்குநர் அதை சாத்தியப்படுத்தினார். ரசிகர்களுக்காக பல ஆச்சரியங்கள் இந்தப் படத்தில் உள்ளது. அருள்நிதி, அஜய் ஞானமுத்து மற்றும் முழு குழுவும் இந்தப் படத்தை மிகுந்த பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். விரைவில் படத்தின் வெளியீட்டுப் பணிகளை தொடங்கவுள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !