விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணம் பிப்ரவரி 26ம் தேதி நாளை உதய்பூரில் உள்ள ஐடிசி ஹோட்டலில் நடைபெற உள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களும் பங்கேற்க உள்ளார்கள். அவர்கள் இருவரின் மரபுகளின்படி இந்த திருமணம் நடைபெற உள்ளது.
முன்னதாக , விஜய் தேவரகொண்டாவின் பெற்றோர் பிரதமர் மோடிக்கு திருமண அழைப்பிதழ் அனுப்பி உள்ளார்கள். இந்நிலையில் மணமக்களை வாழ்த்தி பிரதமர் மோடி ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், விஜய் தேவரகொண்டா மற்றும் மந்தனா குடும்பங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திருமணம் தம்பதியரின் வாழ்க்கையில் ஒரு அழகான புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகும். வாழ்நாள் முழுவதும் நட்பு மற்றும் திருமணத்தில் தோழமையுடன் வாழ வேண்டும். கனவுகள், அன்பு, பரஸ்பரம், மரியாதை மற்றும் புரிதல் நிறைந்த எதிர்காலம் அமையும் என்று வாழ்த்தி தனது ஆசீர்வாதத்தை தெரிவித்திருக்கிறார்.