சீரியசான வேடங்களில் நடிப்பது ஏன்? துஷாரா விஜயன்
புஷ்கர், காயத்ரி தயாரிப்பில் 'மஞ்சப்பை, வாகை சூடவா' படங்களின் இயக்குனர் சற்குணம் இயக்கும் வெப்சீரிஸ் 'எக்ஸாம்'. அரசு தேர்வுகளின் பின்னணியில் இருக்கும் ஊழல், மாணவர்களின் பாதிப்புகளை 7 எபிஷோடுகளாக இந்த கதை விவரிக்கிறது. இதில் துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ் நடிக்கிறார்கள். மே 15ல் ரிலீஸ் ஆகிறது. போலீசான அதிதிபாலனை கடத்திவிட்டு, துஷாரா அவரை போல நடிப்பதாக கதை நகர்கிறதாம்.
'எக்ஸாம்' குறித்து பேசிய துஷாரா, ''நான் கண்ணை மூடிவிட்டு இந்த கதையில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதற்கு புஷ்கர், காயத்ரி, சற்குணம் தான் காரணம். நான் ஒரே மாதிரியான சீரியஸ் ரோலில் நடிப்பதாக சொல்கிறார்கள். அது இருக்கட்டுமே. என்னை கதைதான் தேர்வு செய்கிறது. என் வீட்டில் பிரஷர் இல்லை. நான் 6 மாதம் சும்மா இருந்தால் கூட அவர்கள் எதுவும் கேட்கமாட்டார்கள். இந்த படப்பிடிப்பில் அதிதிபாலனுடன் சண்டைக்காட்சியில் சிறப்பாக நடித்து இருக்கிறேன். ஆனாலும் சில சமயம் நிஜ அடியும் அவருக்கு விழுந்து இருக்கிறது. '' என்றார்.
விரைவில் 'சார்பட்டா பரம்பரை 2' தொடங்குகிறது. அதிலும் துஷாராவுக்கு நிறைய சீன்கள் இருப்பதாக தகவல். 'ராயன், வீரதீரசூரன், அநீதி, வேட்டையன், கழுவேத்தி மூர்க்கன், நட்சத்திரம் நகர்கிறது, சார்பட்டா பரம்பரை' என வரிசையாக சீரியசான ரோலில் நடிக்கும் துஷாராவுக்கு பக்கா மார்டனாக, கலர்புல்லான கேரக்டரில் நடிக்க ஆசை. தனது ஹோம்லி இமேஜை உடைக்கவே இந்த வெப்சீரிசில் நடித்து இருப்பதாகவும் தகவல்.