உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தந்தை மகளின் மோதலாக உருவான வெப் சீரிஸில் சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ்

தந்தை மகளின் மோதலாக உருவான வெப் சீரிஸில் சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், வெப் சீரிஸ் பக்கமும் கவனத்தை செலுத்துகிறார். தெலுங்கில் உருவாகியுள்ள இசாகப்பட்டினம் என்கிற வெப் சீரிஸில் பாரதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தந்தையாக நாயுடு என்கிற கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். தந்தை மகள் இருவருக்கு இடையேயான மோதலை கதையின் மையக்கருவாகக் கொண்டு இது உருவாகியுள்ளது.

தந்தையின் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரத்தில் தனது தந்தையின் வலிமையையும் அதிகாரத்தையும் எதிர்க்கத் துணிந்த மகள் பாரதியின் போராட்டமே இதன் கதைக்களம். ஏழு எபிசோடுகளைக் கொண்ட இந்த வெப்சீரிஸ், தமிழ் மற்றும் இந்தி மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு மொத்தம் 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், வரும் ஜூலை இரண்டாம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !