உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜூலை 17ல் அருள்வான் ரிலீஸ்

ஜூலை 17ல் அருள்வான் ரிலீஸ்

தமிழில் தகராறு, வீர சிவாஜி, தேன் உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் கணேஷ் விநாயகன். இவர் புதிதாக இயக்கி உள்ள படம் ‛அருள்வான்'. அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட், கிருத்திகா ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தை 90 பிக்சர்ஸ் எனும் நிறுவனம் தயாரிக்கின்றனர் . கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வந்தன. இப்போது ஜூலை 17ம் தேதியன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர். கிராமிய பின்னணியில் பீல் குட் படமாக தயாராகி உள்ளது.

அருள்நிதி நடிப்பில் இதற்கு முன் ‛ராம்போ' என்ற படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. அடுத்து இவரது நடிப்பில் உருவாகி உள்ள ‛டிமான்டி காலனி 3' படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் சூழலில் அதற்கு முன்னதாகவே ‛அருள்வான்' படம் ரிலீஸாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD, Mississauga
2026-07-13 21:35:08

இவர் ஒன்னும் top கிளாஸ் நடிகர் இல்லை ஆனால் இவர் சூஸ் பண்ணும் படங்கள் எல்லாமே top கிளாஸ் தான் . இந்த மௌன குருக்கு என்று ஒரு style இருக்கு என்று ஒரு ரசிக படை உண்டு.. அருள்வான் trailer நல்ல படம் என்று சொல்கிறது இது எத்தனை பேர் ரசிக்க போறாங்க னு தெரியல ஆனால் ரசித்த பல பேர் யாரோ ஒரு ஸ்டுடென்ட்க்கு கை கொடுப்பாங்க னு மட்டும் என்னை சொல்ல சொல்லுது.