உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பட்டம் பெற்ற அனிகா சுரேந்திரன்

பட்டம் பெற்ற அனிகா சுரேந்திரன்

அஜித், நயன்தாரா நடித்து வெளிவந்த 'விஸ்வாசம்' படத்தில் அவர்களது மகளாக சிறுமியாக நடித்த அனிகா சுரேந்திரன் தற்போது பட்டம் பெற்றுள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சாக்ரெட் ஹார்ட் கல்லூரியில் அவர் இதழியல் துறையில் பட்டம் பெற்றுள்ளாராம்.

நேற்று அவருடைய இன்ஸ்டாகிராம் தளத்தில், பட்டம் பெற்ற புகைப்படங்களைப் பகிர்ந்து, “எடுத்த முயற்சி அனைத்திற்கும் தகுதியானது” என்று பதிவிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக நண்பர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தமிழில் கடந்த வருடத்தில் வெளிவந்த 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இந்திரா' ஆகிய இரண்டு தமிழ்ப் படங்களில் மட்டும் நடித்திருந்தார் அனிகா. அதன்பின் படிப்பில் கவனம் செலுத்தி தற்போது பட்டம் பெற்றுள்ளார்.

கேரளாவைப் பொறுத்தவரை எந்தத் துறையில் இருந்தாலும் ஒரு பட்டம் பெற வேண்டும் என்பது அங்குள்ளவர்களின் லட்சியமாக இருக்கும். அப்படித்தான் அனிகாவும் ஒரு பக்கம் நடித்துக் கொண்டே படித்து பட்டமும் வாங்கியுள்ளார். இனி நடிப்பில் அதிக கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !